சம்மர் ஸ்பெஷல் - மாம்பழ பத்தோலி

Webdunia|
FILE
கோடை காலமென்றாலே முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம் தான். மாம்பழ சீசன் கலைகட்டும்போது, அதனை கொண்டு விதவிதமான புதுவகை உணவு வகைகளை செய்து அசத்த நீங்கள் தயாரா..?

தேவையானவை

அரிசி மாவு - 1 கப்
மாம்பழம் - 1
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
சக்கரை - 1/4 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி நறுக்கிய மாம்பழ துண்டுகள், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், சக்கரை ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
தயார் செய்து வைத்த அரிசி மாவை சிறிய உருண்டைகளாக்கி அவற்றை சப்பாத்திபோல் செய்து, அதன் நடுவில் மாம்பழ கலவையை வைத்து மூடி, இட்லி குக்கரில் 7 நிமிடங்கள் வேகவைத்தால் சுவையான மாம்பழ பத்தோலி ரெடி

இதில் மேலும் படிக்கவும் :