காஜு கத்லி

Webdunia|
காஜு கத்லி என்பது அனைவருக்கும் பரிச்சயமான ஒரு இனிப்பு வகையாகும். பெரும்பாலும் உயர் ரக ஹோட்டல்களில் மட்டும் விற்கப்படும் இந்த இனிப்பு வகையை சுலபமாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

தேவையானவை

முந்திரி பருப்பு - 1 கப்
சக்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 4 ஸ்பூன்
நெய் - சிறிது

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறது சூடேற்றவும்.மிதமான சூட்டில் முந்திரி பருப்பை மோருமொருப்பாகும் வரை வறுக்கவும்.
வறுபட்ட முந்திரியை நன்கு அரைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.சக்கரையை ஈரபடுத்த மட்டும் தண்ணீர் உபயோகிப்பதால் சிறிய அளவு தண்ணீரே போதுமானது.

பாகு கொதிவந்ததும் அடுப்பை அணித்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் ஏலக்காயதூளை பாகுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்த கலவையை நெய் தடவிய தட்டின் மீது பரப்பி சிறிது நேரம் கழித்து துண்டுகளாக வெட்டியெடுத்தால் சுவைமிக்க காஜு கத்லி ரெடி


இதில் மேலும் படிக்கவும் :