உளு‌ந்து ல‌ட்டு

Mahalakshmi| Last Modified செவ்வாய், 26 மே 2015 (09:21 IST)
தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 2 கப்
அரிசி - 2 தேக்கரண்டி
சர்க்கரை பவுடர் - 2 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தனித்தனியே பருப்பு மற்றும் அரிசியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் தனித்தனியாக தூளாக அரைத்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு அது காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாகக் கொட்டி கிளறவும்.

நன்கு கிளறியதும், வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.


இதில் மேலும் படிக்கவும் :