ஆலு ( உருளைக்கிழங்கு) அல்வா

Webdunia|
உருளைக்கிழங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காய் வகை. இந்த உருளைக்கிழங்கை கொண்டு புதுவகையான அல்வாவை மிக சுலபமாகவும், விரைவாக செய்து அசத்தலாம்.

தேவையானவை

உருளைகிழங்கு - 3
பால் - 1 கப்
சக்கரை - 1/2 கப்
நெய் - 4 ஸ்பூன்
ஏலக்காய் - 3
முந்திரி, பாதாம் - சிறிதளவு

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்து மசித்த உருளை கிழங்கை 7 - 8 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

உருளை கிழங்கு கலவை அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் பால் மற்றும் சக்கரையை சேர்த்து நன்றாக சமைத்து, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து சூடாக பரிமாறவும்,


இதில் மேலும் படிக்கவும் :