ஆப்பி‌ள் பாதாம் அல்வா

Webdunia|
ஆப்பி‌ள் பாதாம் அல்வா ஒரு வித்தியாசமான இனிப்பு வகை. நாவூறும் சுவையுடைய இந்த இனிப்பை சுலபமான செய்ய கொடுக்கப்பட்டுள்ள முறையை பயன்படுத்துங்கள்.

தேவையானவை:

துருவிய ஆப்பிள் - 4
பாதாம் - 1 கப்
நெய் - 1/4 கப்
ச‌ர்க்கரை - 3/4 கப்
இலவங்கம் - சிறிது
ஏலக்காய் - 2
பால் பவுடர் - 1 கப்

செய்முறை: பாதாமை தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்து மையாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வானலியில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிள் மற்றும் ச‌ர்க்கரை சேர்த்து கிளறவும். அதனோடு இலவங்கம், ஏலக்காய், பாதாம் விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கிளறவும். கலந்த பிறகு கடைசியாக பால் பவுடர் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கினால் சுவையான ஆப்பிள் பாதாம் அல்வா ரெடி.இதில் மேலும் படிக்கவும் :