சிற்றிதழ் : கவிதாசரண்

Webdunia| Last Updated: திங்கள், 24 பிப்ரவரி 2014 (18:56 IST)
சூப்பர்! இல்லையா? நமது எழுத்தாளர் கம் முதலாளிகளின் வரையறைகளைக் கவனியுங்கள். ஒருத்தன் எழுத வேண்டுமானால் அவன் நல்ல நில்பன்தனாக இருக்க வேண்டும். விசுவாசமான ஊழியனாக இருக்க வேண்டும். அல்லது ஜவுளிக்கடை, கந்து வட்டி, புத்தக வியாபாரம் முதலியவற்றில் வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது பட்டுப்புடவை கட்டிய மாமிகளாவது வரவேண்டும். அல்லது ஆர்.எஸ்.எஸ். புத்தக் கடையில் வைத்து விற்கத்தக்க அளவிற்கு நூல் எழுதிய கன்னியவானாக இருக்க வேண்டும். கமலஹாசன், சுஜாதா போன்றவர்களின் திருப்பாதங்கள் படக்கூடிய இடமாக உங்கள் விழா மேடைகள் அமைய வேண்டும். இத்தகைய கண்ணியவான்களாக இல்லாத பட்சத்தில் உங்களை எழுத்தாளர்களாக ஏற்க முடியாது. குடித்து விட்டு வந்தீர்களானால் உங்களை உள்ளேயே விட முடியாது. ஏதாவது இடையில் பேசினால், மேடைப் பக்கம் தள்ளாடினால் நாலு சாத்து சாத்துவோம், உதைப்போம், அவமானப்படுத்துவோம். எங்கள் கூட்டங்களுக்கு வருகிற எந்த பிராணியும் இப்படி நாங்கள் சாத்துவதைக் கண்டு கொள்ளாது. இவர்களின் கணக்குப்படி பாரதி முதற்கொண்டு நஸ்ருல் இஸ்லாம், மயாகேசாவ்ஸ்கி, ஜெனே இவர்களெல்லாம் எழுத்தாளர்களே அல்ல. தரும அடிகளுக்குத் தகுதியானவர்கள். ஏதோ ஒரு வகையில் இதற்கு ஒரு எதிர்ப்பு தெரிவிப்பது என்கிற வகையில் ஒரு சிறு பிரசுரம் வெளியிடுவதாக முடிவு செய்தோம் ("எழுத்தாளர்கள் மீதான இலக்கிய பாசிஸ்டுகளின் வன்முறை" என்னும் இப் பிரசுரமும் இதழில் வெளியாகியுள்ளது.)

எழுத்தாளர்களின் மீதான இலக்கிய அதிகார மய்யங்களின் வன்முறைத் தாக்குதலுகு எதிரான இன்னொரு சிறிய முயற்சி சில இளம்

எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சென்ற மாதம் "இந்தியா டுடே" இதழில தொடர்ந்து இரு வாரங்கள் எழுத்தாளர்களை இழிவு செய்யும் கட்டுரைகள் வந்தன. சாரு நிவேதிதாவின் பேட்டியாக ஒன்று. அடுத்த இதழிலேயே தமிழ் இலக்கியச் சூழல் பற்றி இன்னொரு கட்டுரை. இரு மாதங்களுக்கு முன்பு ஒரு "பாரில்" நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தை முழுமையாகக் கொண்டு இவ்விரு கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த இலக்கியக் கூட்டம் நன்றாகவே நடைபெற்றிருக்கிறது. வெளி ரங்கராஜன், வளர்மதி முதலியோர் உருப்படியான கட்டுரைகள் வாசித்துள்ளனர். கூட்டம் முடிந்து மறுபடி இவர்களில் சிலர் குடித்துக் கொண்டிருந்த போது சாரு நிவேதிதாவுக்கும் வளர்மதிக்கும் நடந்த மோதலில் சாரு நிவேதிதாவிற்குச் சில பற்கள் காலி. இது குறித்து ஒரு பிரபல இதழ் கட்டுரை எழுதுவதென்றால் இரண்டு தரப்பையும் சந்தித்து, நடுநிலையாளர்களையும் கேட்டுத்தானே எழுத வேண்டும். முழுக்க முழுக்கச் சாருவின் தரப்பை மட்டும் கேட்டு முதல் வாரம் ஒரு பேட்டி. வளர்மதி தரப்பில் கருத்துச்சொல்ல முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இரண்டாவது வாரம் மீண்டும்
வளர்மதியையும் குறிப்பான சில எழுத்தாளர்களையும் சரியாகச் சொல்வதானால் காலச்சுவடு குமபலால் கண்ணியமானவர்களாகக் கருதப்படாத எழுத்தாளர்கள் சிலரை இழிவு செய்வதாகவும் அக்கட்டுரை அமைந்தது. என்னைப் போன்றவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கள் சிதைத்து ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. காலச்சுவடு கண்ணன் வழக்கம் போல தடித்தனமாகப் பேசியது அப்படியே பிரசுரமாகி இருந்தது.
இந்த இடத்தில் "இந்தியா டுடே"யின் இன்றைய பொறுப்பாசிரியர் ஆனந்த நடராசனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இந்த நபர் இத்தகைய ஒரு பொறுப்பிற்கு எந்தத் தகுதியும் அற்றவர் என்பதற்கு "இந்தியா டுடே" இதழில் இவர் எழுதுகிற அசட்டு அரசியல் கட்டுரைகளே சாட்சி. இன்னொரு சாட்சி வேண்டுமென்றால் கடைசியாக வந்த "இந்தியா டுடே" இலக்கிய மலரில் அவர் எழுதிய கி.வா.ஜ. பாணி பயணக்கட்டுரை. இவரது இந்தத் தகுதியின்மையை நமது "செல்போன்" "பார்ட்டி"கள் நன்றாகவபயன்படுத்திக் கொள்கின்றனர். மணிக்கணக்கில் "செல்போன்" மூலம் வழிந்து, மிரட்டி, கரியம் சாதித்துக் கொள்ளும் தமிழ் இலக்கியவாதிகள் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர்களது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ஒரு நபராக நடராஜன் செயல்படுவதின் விளைவுதான் மேற்படி இரு கட்டுரைகளும். தமக்குப் பிடிக்காத "இந்தியா டுடே" ஊழியர்கள் மீதும் இந்த "செல்போன்" பார்ட்டிகள் புகார்கள் சொல்லி மிரட்டுவதாகவும் அறிகிறோம். இப்படி ஒரு ஊழியர் பற்றி அவதூறாகச் சில மாதங்களுக்கு முன் "காலச்சுவட்டில்" ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :