பக்தியுள்ள விதவை

ஆம்புரோஸ் பியர்ஸ் - தமிழில் முத்துக்க்குமார்

Webdunia|
கணவனை இழந்த ஒரு பெண் கணவனின் கல்லறை அருகே அழுது கொண்டிருந்தாள், அப்போது அவளை ஒரு கனவான் அணுகினான், மிகுந்த மரியாதையான நடத்தையுடன் அவன் அவளிடம் அதிமென்மையான உணர்வுகளை அவளுக்காக அவன் உற்சாகப்படுத்திவந்ததாக அவளிடம் உறுதியளித்தான்.

"ஈனனே!" உடனே இங்கிருந்து போய்விடு, இந்தக் கணத்தை என்னிடம் விட்டுவிடு; காதல் பற்றி என்னிடம் பேசுவதற்கு இதுவா தருணம்? என்று அவள் அந்த கனவானை கடுமையாக சாடினாள்.

"நான் உங்களிடம் எனது நேசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அதைக்கூறவில்லை என்று உறுதியாக கூறுகிறேன், என்று மிகவும் நிதானமாக பதிலளித்த அந்தக் கனவான், "ஆனாலும் எனது விருப்பத்தை உங்களது அழகின் சக்தி ஆட்கொண்டுவிட்டது' என்றான்.
"நான் அழாமல் இருக்கும்போது நீ என்னை பார்க்கவேண்டும்" என்றாள் அந்த விதவை.


இதில் மேலும் படிக்கவும் :