வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha priya
Last Updated : புதன், 9 ஜூலை 2014 (17:38 IST)

சமுத்திரகனியின் நடிப்பு இந்தப் படத்துக்கு யானை பலம் - தனுஷ் பேட்டி

வேலையில்லா பட்டதாரி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் தனுஷும் மற்ற நட்சத்திரங்களும். படம் குறித்த கேள்விகளுக்கு தனுஷ் அளித்த பதில்களும், படம் குறித்த நம்பிக்கைகளும் இங்கே உங்களுக்காக.
25 -வது படம் என்பது ஒரு மைல்கல். என்ன நினைக்கிறீங்க?
 
வேலையில்லா பட்டதாரி என்னுடைய 25 -வது படம். நான் சினிமாவுக்கு வந்து 14 வருஷமாகுது. முன்னாடியெல்லாம் சினிமாவுக்கு வர்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். இப்போ வர்றது ஈஸி. ஜெயிக்கிறதும் நிலைச்சு நிற்கிறதும்தான் கஷ்டம். பதினாலு வருஷமா நான் இருக்கேன்னா அதுக்கு பலபேர் காரணம். 
 
குறிப்பா இந்தப் படம் பற்றி...?
 
வேலையில்லா பட்டதாரி எனக்கு ரொம்ப முக்கியமான படம். கரெக்டான டைம்ல கரெக்டான கதையை வேல்ராஜ் எனக்கு கொடுத்திருக்கார். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் சந்தோஷமாக இருக்கேன்.
 

மீண்டும் விவேக்குடன் கூட்டணி...?
 
விவேக் சார்கிட்ட முதல்ல கதை சொன்னப்போ தயங்கினாங்க. பிறகு பண்றேன்னு ஒத்துகிட்டாங்க. இதுவரை படம் பார்த்தவங்க எல்லாருமே விவேக் சாரை தனியா மென்ஷன் பண்ணி சொல்றாங்க. இன்னொண்ணு என்னோட 25 -வது படத்துல அவர் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். கடவுள் ஆசிர்வாதத்துல அது நடந்திருக்கு. 
படத்தில் உங்க அம்மாவாக நடித்திருக்கிற சரண்யா குறித்து...?
 
அவங்களைப் பற்றி என்ன சொல்றது. எந்த சீன் சொன்னாலும் சுலபமா நடிச்சிடுறாங்க. ஒரு கட்டத்துல எல்லா படத்துலயும் மனோரமா ஆச்சி இருந்தாங்க. அந்த மாதிரிதான் இப்போ சரண்யா மேடம் இருக்காங்க. 
 
ஹீரோயின் அமலா பால்...?
 
அமலா பாலுக்கு கேர்ள் நெக்ஸ்ட் டோர் லுக் இருக்கு. யதார்த்தம் ரொம்ப இருக்கணும்ங்கிறதுக்காகதான் அவங்களை நடிக்க வச்சோம். அவங்களும் அழகா நடிச்சிருக்காங்க. அவங்க கேரக்டர் அப்படியொண்ணும் ஈஸி கிடையாது. நல்ல பண்ணியிருக்காங்க.
சுரபி இரண்டாவது ஹீரோயினா?
 
சுரபிக்கு ரொம்ப சின்ன கேரக்டர்தான். அவங்களுக்கும் விவேக் சார் மாதிரி தயக்கம்தான். அப்புறமா சிறப்பா நடிச்சு தந்தாங்க.
 

சமுத்திரகனியை எப்படி அப்பா கேரக்டரில் நடிக்க வச்சீங்க?
 
சமுத்திரகனி சாரை மீட் பண்ணி அப்பா கேரக்டர்னு சொன்னப்போ அவருக்கு கொஞ்சம் தயக்கம். இதுவரை அவர் அப்பா கேரக்டர் பண்ணுனதில்லை. அவருக்கு தயக்கமா இல்லையா தெரியலை, ஆனா அவரோட நண்பர்களுக்கு ரொம்ப தயக்கம் இருந்ததா நினைக்கிறேன். அவரோட நண்பர்கள் மட்டுமில்லாம வேற பலரும் பண்ணாதீங்கன்னு சொன்னதா கேள்விப்பட்டேன். அது எல்லாமே தாண்டி என்மீது இருக்கிற அன்பினாலும் நட்பினாலும் நடிக்க ஒத்துகிட்டார். இந்தப் படத்துக்கு யானை பலம் சமுத்திரகனி சாரோட பெர்பாமென்ஸ். என் அண்ணன் செல்வராகவன் படம் பார்த்துட்டு முதல்ல கேட்டது, யார்ரா இந்த அப்பாங்கிறதுதான்.
 
வேலையில்லா பட்டதாரி ஐடி கிராஜுவேட்டா?
 
இல்லை இன்ஜினியரிங் கிராஜுவேட்.
ட்ரெய்லரில் சிகரெட் பிடிக்கிற காட்சி இருக்கு. அதை ப்ரமோட் செய்றீங்களா?
 
சிகரெட் பிடிக்கிறதை ப்ரமோட் செய்றது கிடையாது. யாராவது அதை செய்வாங்களா, தொடர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறதை ப்ரமோட் பண்றேன்னு. அப்படி கிடையாது. ஒருசில கேரக்டர்ஸ் சிகரெட் பிடிக்காம பண்ணலாம். ஒருசில கேரக்டர்ஸுக்கு தவிர்க்க முடியாம சிகரெட் பிடிக்கிற மாதிரி ஆயிடும். அது இல்லாம பண்ண முடியாதுன்னு சொல்ல வரலை. ஆனா கொஞ்சம் யதார்த்தமா இருக்கும். சிகரெட் பிடிக்கிறதை மட்டும் படத்துல சொல்லலை. அதனால என்ன பிரச்சனை வரும்ங்கிறதையும் சொல்லியிருக்கோம், அது கூடாதுங்கிறதையும் சொல்லியிருக்கோம்.
 
குண்டா இருக்கிறவங்க சிக்ஸ்பேக் வைக்கிறது கஷ்டம். நீங்க ஒல்லியாகதான் இருக்கீங்க. உங்களுக்கு என்ன சிரமம்?
 
குண்டா இருந்தாலும் ஒல்லியா இருந்தாலும் சிக்ஸ்பேக் வரவைக்கிறது கஷ்டம். அதைவிட அதை மெயின்டெய்ன் செய்றது ரொம்ப கஷ்டம். கிளைமாக்ஸ் ஃபைட்டுக்காக இரண்டு நாள் தண்ணி குடிக்காம இருந்தேன். பாடி டி ஹைட்ரேட் ஆகணும். அந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் இதுல இருக்கு. 
 

இந்தப் படத்துக்கு சிக்ஸ்பேக் கண்டிப்பா தேவையா?
 
அப்படி கேட்டா, சத்தியமாக கிடையாது. எக்ஸ்ட்ரா அடிஷன்தான். டெக்கரேஷன் மாதிரி.
படம் எப்போது வருகிறது?
 
சென்சாருக்கு படத்தை அனுப்பியாச்சு. அது முடிந்த பிறகு சரியான தேதியில் ரிலீஸ் பண்றதுக்கான முயற்சிகள் நடந்துகிட்டிருக்கு.