சண்டைக்கும் ‌ரிகர்சல் பார்ப்பேன் - அர்ஜுன்

WD
நான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகிறது. இன்னும் நான் முதலில் நடித்தது போல் நடித்தாலோ, சண்டையிட்டாலோ ரசிகர்களுக்கு சலிப்பு வந்துவிடும். கதையைப் போலவே படத்துக்குப் படம் சண்டைக் காட்சிகளிலும் வித்தியாசம் வேண்டும். இத்தனை நீண்ட காலம் ஹீரோவாக நடிப்பது அத்தனை எளிய விஷயமில்லை. எ‌ல்லோரும் நடிப்பதற்கு ‌ரிகர்சல் பார்ப்பார்கள். நான் சண்டைக் காட்சிகளுக்கும் ‌ரிகர்சல் பார்ப்பேன்.

ஒவ்வொரு படத்திலும் அதிக ‌ரிஸ்க் எடுக்கிறீர்களே?

எல்லாப் படத்திலும் ‌ரிஸ்க் எடுத்தாலும் வந்தே மாதரம் படத்துக்காக ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு குதித்ததை என்னால் மறக்க முடியாது. இந்தக் காட்சியை மும்பையில் எடுத்தோம். மருதமலைப் படத்துக்காக பத்து மாடி கட்டிடத்திலிருந்து குதித்தேன். இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ‌ரிஸ்க் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சிலவேளை தொடர்ந்து ஒரே இயக்குன‌ரின் படத்தில் நடிக்கிறீர்களே?

நீங்கள் இயக்குனர் ஏ.வெங்கடேஷை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவரை எனக்கு ஷங்க‌ரின் ஜென்டில்மேன் படத்தில் நடித்தபோதே தெ‌ரியும். அவர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குனர். ஏற்கனவே இரண்டுப் படங்களில் அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் வல்லக்கோட்டை மூன்றாவது படம். நல்ல கூட்டணி தொடர்வதில் தப்பில்லையே.

நீங்கள் நடித்த சில நல்ல படங்களும் எதிர்பார்த வெற்றியை பெறவில்லையே?

எவ்வளவு நல்ல படம் என்றாலும் ச‌ரியான நேரத்தில் ச‌ரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதில் தவறினால் எந்தப் படமும் தோல்வியடைந்துவிடும்.

WD
இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பீர்களா?

ஏன் இதற்கு முன்னாலும் நடித்திருக்கிறேனே. குமல் சார் கூட குருதிப்புனல் படத்தில் நடித்திருக்கிறேன். பொம்மலாட்டத்தில் நானே படேகருடன். தெலுங்கில் ஜெகபதிபாபுவுடன் நடிச்சிருக்கேன். சமீபத்தில் வந்த வந்தே மாதரத்தில்கூட இரண்டு ஹீரோக்கள்தான். நான், மம்முட்டி.

நீங்கள் இயக்குன‌ரின் வேலையில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாற்று உள்ளதே?

சில நேரம் நான் காட்சிகளில் தலையிட்டு அதை மாற்றச் சொல்வதாக சிலர் கூறுகிறார்கள். அது தலையீடு கிடையாது. காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறேன். என்னுடைய 25 வருட அனுபவத்தாலும், சினிமா மீதுள்ள ஈடுபாட்டாலும் நான் எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அதனை ஒரு குறையாக கருத வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

இந்தியில் நடிப்பது என்னவானது?

இந்தியில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நேரமின்மையால் நடிக்க முடியாமல் தள்ளிப் போகிறது.

அடுத்து நீங்கள் படம் இயக்கப் போவதாக செய்தி உள்ளதே?

Webdunia|
ஆ‌க்சன் கிங் என்ற அடைமொழிக்கு இப்போதும் அர்த்தம் செய்கிறவர் அர்ஜுன். அவரது வல்லக்கோட்டை படத்தில் வரும் சண்டைக் காட்சிகளைப் பார்க்கும் ஒருவர் இதனை உணர்ந்து கொள்வார். இந்த வயதிலும் அடுத்தடுத்தப் படம் என ஓடிக் கொண்டிருக்கும் அவரது சுறுசுறுப்பு இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவரது எண்ணங்கள் வாசகர்களுக்காக...
சண்டைக்காட்சிகளுக்கு முக்கித்துவம் தேவைதானா?
நான் சொந்தப் படம் இயக்க கதை தயார் செய்து வருகிறேன். அது அடுத்தப் படமா என்பதை இப்போது கூற முடியாது.


இதில் மேலும் படிக்கவும் :