ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் - நடிகை மீத்தா

Webdunia|
WD
நடிகைகளிடம் உங்களது ஹாபி என்ன என்று கேட்டால் புத்தகம் படிப்பது, சாட் செய்வது, சமூக சேவை செய்வது என்றுதான் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாட்டுத்தாவணி படத்தில் அறிமுகமாகியிருக்கும் மீத்தாவை கேட்டால் தயங்காமல் பதிலளிக்கிறார், அவரது ஹாபி குதிரை சவா‌ி செய்வது. அதிரடியாகப் பேசும் அவரைப் பற்றிய அறிமுக உரை உங்களுக்காக.

குதிரை சவா‌ி எப்படி கத்துகிட்டீங்க?

எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமாவில் நடிக்கிற ஆசை இருந்திச்சி. அதனால், டான்ஸ், பாட்டு, குதிரை சவா‌ரின்னு சினிமாவுக்கு‌த் தேவையான அத்தனையும் கத்துகிட்டேன்.
ஓய்வா இருந்தால் உங்களை குதிரை மீதுதான் பார்க்க முடியுமா?

குதிரை சவா‌ி என்னோட ஒன் ஆஃப்தி ஹாபிதான். நீச்சல் அடிக்கிறதும், டான்ஸ் பிராக்டீஸ் பண்றதும் ரொம்பப் பிடிக்கும். நல்ல புத்தகங்கள் கிடைச்சா அதையும் விடமாட்டேன்.
உங்க வீட்டில் இதற்கெல்லாம் எப்படி அனுமதி கிடைச்சது?

என்னோட அம்மா ஹவுஸ் மேக்கர். அப்பா சினிமாவில் மியூசிக் டைரக்டரா இருக்கார். பேர் ஆத்திஷா. அதனால என்னோட நடிப்பு ஆசைக்கு யாரும் தடை சொல்லலை.

உங்க பூர்வீகம்...?
ஆந்திரா.

இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?

ஒருமுறை நான் அப்பாவோட பவித்திரன் சார் ஆபிஸுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் நடிக்கிறீயான்னு கேட்டார். உடனே ஓகேன்னு சொன்னேன். அப்படிதான் மாட்டுத்தாவணி வாய்ப்பு கிடைச்சது.

மாட்டுத்தாவணி அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப நல்ல அனுபவம். மதுரை பின்னணியில் எடுக்கப்பட்ட படம்னாலும் நானும் கல்லூரி வர்றேன். இன்னொரு ஹீரோயினா மிதுனா நடிச்சிருக்காங்க.

WD
அடுத்து...?
ஆதாரம் ‌எ‌ன்கிற படத்தில் நடிச்சிட்டிருக்கேன். உங்கள் கவனத்திற்கு படத்திலும் நான்தான் ஹீரோயின். இதில் ஹீரோ விக்னேஷ். இது தவிர திருமண அழைப்பிதழ் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

மலையாளத்திலும் நடிச்‌சிருக்கீங்க இல்லையா?

ஆமா, இயக்குனர் சுனில் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சைலன்ஸ் ஆஃப் விஷன்ங்கிற பெயர்ல ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்காங்க.
ஒரு பாடலுக்கு ஆடச் சொன்னால் ஆடுவீர்களா?

நிச்சயமாக மாட்டேன். குத்துப் பாடலில் ஆட எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தொடர்ந்து அதே மாதி‌ரியான வாய்ப்புகள்தான் வரும். அதனால் சின்ன வேடங்களிலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
கிளாமராக நடிப்பீர்களா?

கதைக்கு தேவையென்றால் கிளாமர் ஓகேதான். ஆதாரம் படத்தில்கூட கதைக்கு தேவைப்பட்டதால் படத்தின் இரண்டாவது பகுதியில் கிளாமராக நடித்திருக்கிறேன்.


இதில் மேலும் படிக்கவும் :