அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி இலங்கையில்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி இலங்கையில்
Last Modified சனி, 2 மே 2015 (19:17 IST)
வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி இலங்கை சென்றுள்ளார்.
 


கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர் இராஜ்ய அதிகாரி இவர் தான்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜோன் கெர்ரி, அரசாங்கம் எட்டியுள்ள 'பெரும் முன்னேற்றங்களை' பாராட்டிப் பேசினார்.
 
ஜனநாயகத்தை மீளநிலைநாட்டும் பயணத்தில் அமெரிக்கா இலங்கைக்கு துணை நிற்கும் என்று கெர்ரி கூறினார்.
 
இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்த பின்னணியில் இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கருத்துக்கள் நிலவின.
 
கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் சர்வதேச உறவு முன்னேற்றமடைந்து வருவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இறுதியுத்தக் காலத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :