அரசியலில் இருந்து என்னை விரட்ட முடியாது: ராஜபக்சே உறுதி!

Mahinda rajapaksa
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified புதன், 24 ஜூன் 2015 (20:36 IST)
அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
 
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக பதவி வகித்தவர்கள், அந்த பதவியில் இருந்து விலகிய பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டனர்.
 
ஜே.ஆர்.ஜெயவர்தனே இதில் முக்கியமான அரசியல்வாதியாவார். ஓய்வு பெற்ற பின்னர் அவர் அரசாங்க விஷயங்களிலேயோ அல்லது கட்சி விஷங்களிலேயோ தலையிட்டதில்லை.
 
அதேவேளை முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 10 வருடங்களாக அரசியலில் ஈடுபடாது ஒதுங்கியிருந்தார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
 
இதனிடையே, முன்னாள் அதிபர் ராஜபக்சே மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலையில் செயற்பட்டு வருவதுடன், தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிற கட்சிகளையும் பயன்படுத்தி பெரிய அளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில், அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
 
ஊவா பரணகம சுதர்ஷனாராம விகாரையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு பேசிய ராஜபக்சே, தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயார் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :