செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 அக்டோபர் 2025 (18:06 IST)

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
இன்று ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 173 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். இன்னும் 27 ரன்கள் எடுத்தால் அவர் இரட்டை சதத்தை எட்டி விடுவார். ஜெய்ஸ்வால் அடித்த 173 ரன்களில் ஒரு சிக்ஸர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களில் வாரிகன் என்பவர் மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேறு எந்த பந்துவீச்சாளரும் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.
 
Edited by Siva