உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: படங்களுடன் முழுவிவரம்!

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: திங்கள், 14 ஜூலை 2014 (15:56 IST)
மெஸ்ஸிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு கோல் கம்பத்திலிருது 30 யார்டு தொலைவிலிருந்து ஃப்ரீ கிக் அடிக்கும் வாய்ப்பு. மெஸ்ஸி ஃப்ரீ கிக்கிலும் மன்னன் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஏதாவது நடக்கும் என்ற துடிப்புடன் ரசிகர்கள். ஆனால் மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே திசை மாறி பறந்து சென்றுவிட்டது. அத்துடன் அர்ஜெண்டீனாவின் உலகக்கோப்பை கனவும் பறந்து சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் எக்ஸ்ட்ரா டைமும் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். அர்ஜெண்டீனா வீரர்களும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
பிரேசிலை சாகடித்த ஜெர்மனியை தனது அண்டை நாடான அர்ஜெண்டீனா தோற்கடிக்க வேண்டும் என்று பிரேசில் ரசிகர்களும் விரும்பினர். பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரும் அதை வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஜெர்மனியின் தன்னலமில்லாத கூட்டு முயற்சி, கவனம் சிதறாத ஆட்டம் ஆகியவற்றின் மூலம் 2014 ஆம் ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.இதில் மேலும் படிக்கவும் :