மகளிர் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (21:31 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் ஒருநால் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து 45.1 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய மகளிர் அணி 41.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி: 164/10 45.1 ஓவர்கல்

காப்: 54
வோல்வார்ட்: 39
லூஸ்: 22
டூ பிரீஸ்: 16

இந்திய மகளிர் அணி: 165/2 44.1 ஓவர்கள்

புனியா: 75
ரோட்ரிகஸ்: 55
ரெளட்: 16
மிதிலா ராஜ்; 11

75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த புனியா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :