செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2016 (16:53 IST)

செம்ம பவர் லேடி: ஒரு நிமிடத்தில் ஆண் வீரரை வீழ்த்திய 21 வயது பெண் மல்யுத்த வீராங்கனை

மத்தியப் பிரேதேசத்தில் முதல் முறையாக ஒரு 21 வயதான பெண் மல்யுத்த வீராங்கனை சக ஆண் மல்யுத்த வீரருக்கு வெளிப்படையாக சவால் விட்டு அவரை ஒரு நிமிடத்தில் வீழ்த்தியுள்ளார்.


 
 
குவாலியரை சேர்ந்தவர் ரனி ரனா, இவர் கொடரியா கிராமத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் பள்ளி மைதானத்தில் இருந்த பார்வையாளர்களை குறிப்பாக ஆண் பார்வையாளார்களை ஒரே நிமிடத்தில் ஆண் போட்டியாளரை வீழ்த்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
 
மதியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 26 கிலோமீட்டரில் நடைபெற்ற மகர் சங்கராந்தி விழாவின் தாதா பில்சந்திரா சுலே மல்யுத்த போட்டியில் பங்கேற்ற ஒரே பெண் ரனி ரனா தான்.
 
45 கிலோ எடைப்பிரிவில் ஆண் போட்டியாளருக்கு எதிராக ரனி ரனா அறிவிக்கப்பட்டு அவர் மல்யுத்த களத்தில் குதித்த போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
 
இதற்கு முன் இந்தூரில் சித்ரா யாதவ் என்ற 22 வயது பெண்ணை ஒரு நிமிடத்தில் தோற்கடித்தது ரனி ரனாவின் சாதனையாக இருந்தது.
 
வெற்றி நம்பிக்கையில் ரனாவின் சவாலை ஏற்ற வினோட் பிரஜபதி ஒரு நிமிடத்தில் ரனி ரனாவால் தோற்கடிக்கப்பட்டார்.
 
முன்னாள் ஒலிம்பிக் வீரர் கிருபாஷங்கர் கூறும் போது ரனி ரனாவின் இந்த சாதனை வெற்றிக்கு காரணம் அவரது நம்பிக்கை மட்டுமில்லை, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மல்யுத்த வீராங்கனைகளின் ஊக்குவித்தலும் கூட என்றார்.