வார்னரை வாட்டர்பாயாக மாற்றிய ஹைதராபாத் அணி நிர்வாகம்… கொந்தளித்த ரசிகர்கள்!

Last Updated: திங்கள், 3 மே 2021 (13:21 IST)

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த வார்னரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்
-2021 தொடர்
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்கள் முழு திறமையைக் காட்டி வருகின்றன. ஆனால் ஒரு சில அணிகள்
இன்னும் சோபிக்கவில்லை. இந்நிலையில் தொடர் தோல்விகளைக் கண்டுவரும்
சன்ரைஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்த தொடரில் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் ஐதராபாத் அணி தோல்வியுற்றால் அணியின் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரை நேற்றைய போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலில் இருந்தும் தூக்கியுள்ளது.

போட்டிக்கு இடையே வார்னர் வாட்டர்பாயாக மைதானத்துக்குள் சென்று வீரர்களுக்கு குளிர்பானங்களை வழங்குவதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கோப்பை வாங்கிக் கொடுத்த ஒரு கேப்டனை இவ்வளவு மோசமாக நடத்துவதா எனக் கொந்தளித்துள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :