வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

உள்ளூர் போட்டியில் சதமடித்து அசத்திய விராத் கோலி.. சச்சின் சாதனை முறியடிப்பு..!

உள்ளூர் போட்டியில் சதமடித்து அசத்திய விராத் கோலி.. சச்சின் சாதனை முறியடிப்பு..!
பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் விராட் கோலி அதிரடி சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
 
15 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடரில் களமிறங்கிய கோலி, 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் அதிவேகமாக 16,000 ரன்களை கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
 
விராட் கோலி தனது 330-வது இன்னிங்ஸிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 391 இன்னிங்ஸ்களில் 16,000 ரன்களை கடந்ததே அதிவேக சாதனையாக இருந்தது. சச்சினின் இந்த நீண்டகால சாதனையை 61 இன்னிங்ஸ்கள் முன்னதாகவே கோலி முறியடித்துள்ளார். 
 
கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை இப்போதும் தொடர்வது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 
Edited by Siva