சச்சின், தோனியை முந்தினார் விராட் கோலி - கூகுள் தேடலில் முதலிடம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 18 டிசம்பர் 2015 (13:06 IST)
கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 
 
2015ஆம் ஆண்டு கூகுளில் அதிக அளவு டிரெண்ட்டிங்கில் இருந்த டாப்-10 நிகழ்வுகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.
 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி
இரண்டாவது இடத்தை பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும், 3ஆவது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 4ஆவது இடத்தை மகேந்திர சிங் தோனியும் இடம் பிடித்துள்ளனர்.
 
இந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் ஒன்றில் கூட விளையாடாமல் ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடிய யுவராஜ் சிங் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவர் 9ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 8ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.
 
டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியல்:
 
1. விராட் கோலி
 
2. லியோனல் மெஸ்ஸி
 
3. சச்சின் டெண்டுல்கர்
 
4. மகேந்திர சிங் தோனி
 
5. கிறிஸ்டியானோ ரொனால்டோ
 
6. ரோஜர் ஃபெடரர்
 
7. சானியா மிர்ஸா
 
8. ரோஹித் சர்மா
 
9. யுவராஜ் சிங்
 
10. நோவக் ஜோகோவிச்


இதில் மேலும் படிக்கவும் :