வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (21:26 IST)

3ஆவது தங்கம் வென்றார் உசைன் போல்ட்; தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா வெற்றி

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடர் ஓட்டத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் அணி தங்கம் வென்றது.
 

 
சீனாவில் உள்ள பீஜிங் நகரில் உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது.  8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் உசைன் போல்டின் ஜமைக்கா அணி 37.36 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றது.
 
போட்டியை நடத்தும் சீனா அணி 2ஆவது இடத்தையும், கனடா அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் உசைன் போல்ட் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதே போன்று இதற்கு முன் 2009ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றார். 2013ஆம் ஆண்டு ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மூன்று போட்டியிலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.