பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மொத்தமாக அள்ளிய இலங்கை

Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (23:01 IST)
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் தற்போது டி20 தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த டி20 தொடரில் முதல் இரண்டு டி20 போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வென்ற நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி மொத்த தொடரையும் மொத்தமாக அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது

ஸ்கோர் விபரம்:

இலங்கை : 147/7
20 ஓவர்கள்

ஃபெர்னாண்டோ: 78
சமரவிக்ரம: 12
ஷங்கா: 12

பாகிஸ்தான்: 134/6
20 ஓவர்கள்

ஹரிஸ் சோஹைல்: 52
பாபர் அசாம்: 27
இஃப்டிகர் அகமது: 17

ஆட்டநாயகன்: ஹசரங்கா டிசில்வா


இதில் மேலும் படிக்கவும் :