1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. SRH All-rounder Abhishek Sharma Fined for Breaching IPL Code of Conduct

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

அபிஷேக் சர்மா
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது. 
இந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக், களத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ன் கீழ், ஆபாசமான அல்லது அவதூறான மொழியை பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
இப்போட்டியில் ஐதராபாத் அணி 226 ரன்கள் குவித்து, கேகேஆர் அணியை 161 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தாலும், களத்தில் ஒழுக்கத்தை மீறியதற்காக அபிஷேக் சர்மா இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!