டேனிஷ் கனேரியாவோடு உணவருந்த மறுத்த பாகிஸ்தான் வீரர்கள் – சோயிப் அக்தர் குற்றச்சாட்டு !

Last Modified வெள்ளி, 27 டிசம்பர் 2019 (07:29 IST)
பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளரான டெனிஷ் கனேரியா ஒரு இந்து என்பதால் அவரோடு பாகிஸ்தான் வீரர்கள் உணவருந்த மறுத்து புறக்கணித்ததாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் தனிஷ் கனேரியா. இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் சக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் எவ்வாறு ஒதுக்கப்பட்டார் என்பது குறித்து சோயிப் அக்தர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ‘டேனிஷ் கனேரியா சிறப்பாக பந்துவீசினாலும் ,அவரை சக வீரர்கள் பாராட்ட மாட்டார்கள். புறக்கணிப்பின் உச்சமாக சில வீரர்கள் அவருடன் ஒன்றாக ஒரே மேசையில் உணவருந்த மறுத்தனர்.’ எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனிஷ் கனேரியா அக்தர் கூறியவை அனைத்தும் உண்மைதான் என்றும் ’என்னுடன் உணவருந்த மறுத்த வீரர்கள் பற்றி பேச அப்போது நான் அச்சப்பட்டேன். ஆனால் இப்போது நான் அவர்களின் பட்டியலை வெளியிட தயாராக உள்ளேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :