வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா டி20 உலகக்கோப்பை போட்டியில், சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து சென்றார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து, சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 
 
சஞ்சுவின் நீண்டகால ஆதரவாளரான காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "திருவனந்தபுரத்தின் மகன் இந்தியாவின் பெருமையாக மாறிவிட்டார்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சஞ்சுவின் திறமை மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இன்று உண்மையாகிவிட்டதாக அவர் பெருமிதம் கொண்டார்.
 
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இக்கட்டான சூழலில் சஞ்சு காட்டிய நிதானத்தை பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப், "சஞ்சு சாம்சன் என்ற பெயரை மதியுங்கள்" என புகழாரம் சூட்டியுள்ளார்.  நடிகர் மம்மூட்டியும் சஞ்சுவின் ஆட்டத்தைப் 'பியூர் கிளாஸ்' என வர்ணித்துள்ளார். 
 
தொடக்க வீரர்கள் தடுமாறியபோது நங்கூரம் போல் நிலைத்து நின்ற சஞ்சு, 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் மிரட்டினார். 2016 அரையிறுதி தோல்விக்கு பழிவாங்கும் விதமாக அமைந்த இந்த வெற்றி, ஈடன் கார்டன் மைதானத்தின் மிகப்பெரிய சேஸிங் சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
 
Edited by Siva