கர்ப்பிணி காதலியை மணமுடித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வெள்ளி, 11 ஜூலை 2014 (16:02 IST)
விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் தனது கர்ப்பிணி காதலியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
பிரபல டென்னிஸ் வீரரான ஜோகோவிச் தனது பள்ளிக்கூட வயதில் இருந்தே ஜெலினா ரிஸ்டிரிக் என்பவரை காதலித்து வந்தார். காதலித்து வந்த இவர்களும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக ஜெலினா கர்ப்பமானார்.

இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டினெக்ரோ என்ற நாட்டில் உள்ள அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள உயர்தர ரிசார்ட்டில் நடைபெற்றது.
இதில் அவர்களது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். ஹோட்டல் ஊழியர்கள் யாரும் செல்போனில் படம் எடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இரண்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிச் தனது சாம்பியன் பட்டத்தை தனது மனைவிக்கும், பிறக்க போகும் குழந்தைக்கும் அர்ப்பணித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :