வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (21:43 IST)

”சரிதா தேவிக்கு கருணை காட்ட வேண்டும்” - மத்திய அரசு கடிதம்

சரிதா தேவிக்கு கருணை காட்ட வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைப்பேன் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவல் தெரிவித்துள்ளார்.
 
கடந்த அக்டோபர் 2014ஆம் ஆண்டு தெம் கொரியாவின் இன் சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் இடம்பெற்ற சரிதா தேவி அரையிறுதி போட்டியில் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
 

 
சிறப்பாக செயல்பட்ட அவரை தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது அழுதுவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட வெண்கல பதக்கத்தை கொரிய வீராங்கனையின் கழுத்திலேயே அணிவித்து சரிதா வெளியேறினார்.
 
இந்நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு, சரிதா தேவி மீதான இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவல் தெரிவித்தார்.
 
இது குறித்து நிருபர்களிடம் தெரிவித்த அமைச்சர், “மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான சரிதா தேவி கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் திறமையால் முன்னுக்கு வந்தவர். அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் விரக்தியடைந்து, அவரது செயல்திறன் பாதிக்கப்படும்.
 
மேலும், இந்திய குத்துச்சண்டை வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சரிதா தேவிக்கு கருணை காட்ட வேண்டும் என்று நான் தொடர்ந்து கோரிக்கை வைப்பேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.