“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை

Arun Prasath| Last Updated: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (13:18 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்கு உடனடியாக தனக்கு விசா வழங்குமாறு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியுறவுத் அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

விசா வழங்கும் முறையில் தற்போதைய முறைப்படி, டென்மார்க் நாட்டிற்கு விசா பெற விரும்பும் நபர்கள், தூதரகத்திற்கு நேரடியாக வரவேண்டும் என கட்டாய மாக்கப்பட்டது. இந்நிலையில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்பதற்காக தனக்கு விசா கிடைக்கவில்லை, ஆதலால் எனக்கு உடனடியாக விசா வழங்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய சங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கும் என்னுடைய பயிற்சியாளருக்கு உடனடியாக டென்மார்க் செல்வதற்கான விசா வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அடுத்த வாரம் செவ்வாய்கிழமை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் எங்களுக்கு விசா இன்னும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு பலரும், “நம்பிக்கையுடன் இருங்கள், விசா கிடைத்துவிடும்” என பின்னோட்டங்கள் இட்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :