எனக்கு விசில் போடத் தெரியாது… ஆனால் உங்களை விசில் போட வைப்பேன் – உத்தப்பா நம்பிக்கை!

Last Updated: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:39 IST)

சென்னை அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரூபாய் மூன்று கோடிக்கு ராஜஸ்தான் அணி ராபின் உத்தப்பாவை ஏலம் எடுத்தது. இருப்பினும் அவர் தொடக்க ஆட்டக்காரர் உள்பட பல்வேறு நிலைகளில் விளையாடியும் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் ஒரு அரைசதமோ, சதமோ கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
. இந்த நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ராபின் உத்தப்பா தருமாறு சிஎஸ்கே கேட்டுக் கொண்டது
. அதற்கேற்ப அவர் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில் சி எஸ் கே ரசிகர்களுக்காக அவர் வெளியுட்டுள்ள வீடியோவில் ‘வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க… எனக்குக் கொடுத்த உற்சாக வரவேற்புக்கு நன்றி. நான் தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருடன் சேர்ந்து ஒரு தொடரை வெல்ல வேண்டும். எனக்கு விசில் போட தெரியாது. ஆனால் என்னால் உங்களை விசில் போட வைக்க முடியும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :