வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2016 (17:47 IST)

மைதானத்தை விட்டு வெளியேற்றியதால் ‘ரெஃப்ரி’யை சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்

மைதானத்தை விட்டு வெளியேற்றியதால் ‘ரெஃப்ரி’யை சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்

கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் இருந்து வெளியேற்றியதால் இளம் வீரர் ஒருவர் ‘ரெஃப்ரி’யை சுட்டுக் கொன்றுள்ளார்.
 

 
அர்ஜெண்டினாவின் கோர்டோபா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில், ரெஃப்ரியாக சீஸர் ஃப்ளோர்ஸ் (48) பணியாற்றியுள்ளார். அப்போது, வீரர் ஒருவருக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றி உள்ளார்.
 
இதனால், ஆத்திரமடைந்த அந்த வீரர் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று, தான் வைத்திருந்த பையில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆடுகளத்திற்குள் வந்துள்ளார்.
 
அப்போது, தனது துப்பாக்கியால் ரெஃப்ரியை 3 முறை சுட்டுள்ளார். அவரது கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளை தோட்டா தாக்கியுள்ளது. இதில், அருகிலிருந்த மற்றொரு வீரரான வால்டேர் ஷரடே என்பவரும் பாதிப்படைந்துள்ளார். இவர், ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாக தெரிகிறது.
 
துப்பாக்கியால் சுட்ட வீரரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அர்ஜெண்டினாவில் தொடர்ந்து இதுபோன்று கால் பந்தாட்ட போட்டிகளின்போது வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மஞ்சள் அட்டை காண்பித்ததற்காக ரெஃப்ரியை வீரர் ஒருவர் தாக்கியதால் அவர் சுயநினைவு அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டது.