இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நுழைந்துள்ளது. இந்த போட்டி இன்று நவி மும்பையின் டி. ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆனால், இந்த போட்டிக்கு மழை குறுக்கிட 63% வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மாலை 4 மணி முதல் 7 மணி வரை மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மழை காரணமாக போட்டி தடைபட்டால், அது நவம்பர் 3ஆம் தேதிக்கு அதாவது ரிசர்வ் நாளுக்கு ஒத்திவைக்கப்படும். துரதிர்ஷ்டவசமாக, ரிசர்வ் நாளிலும் மழைக்கு 55% வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு நாட்களிலும் மழையால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை கூட்டாக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.
தனிப்பட்ட முறையில் கோப்பையை வெல்லும் இந்திய ரசிகர்களின் கனவு தற்போது வானிலையின் கைகளில் உள்ளது.
Edited by Siva