வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (14:55 IST)

வழிப்பறி வழக்கில் தங்கம் வென்ற பளு தூக்கு வீரர் கைது

தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பளுதூக்கு வீரர் சமீத் பஞ்சால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
ஹரியான மாநிலத்தில் இரு சக்கரன வாகனத்தில் சென்ற ஒருவரை, அந்த வழியாக வந்த இருவர் திடீரென வழிமறித்து தாக்கியிருக்கின்றனர்.
 
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைகுலைந்த விழுந்த நிலையில் அவரிடமிருந்த ரூ. 4 லட்சத்தையும், அவர் சென்ற வாகனத்தையும் பிடுங்கி சென்று அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர்.
 
இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்திருக்கிறது. ஆனால் குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காணமுடியவில்லை.
 
இந்நிலையில் ஒருவர் அளித்த தகவலின்படி சுமீத் பாஞ்சால் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் நிதி நெருக்கடியின் காரணமாக வேறு வழியின்றி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிவித்திருக்கிறார்.
 
இந்நிலையில் சமீத் பஞ்சால் குறித்து வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமீத் பஞ்சால் மாநில அளவிலான தங்கம் வென்ற பளுதூக்கும் வீரர் என்பது தெரிய வந்திருக்கிறது.
 
ஹரியானாவை சேர்ந்த சுமீத் பஞ்சால் (21) 2012ஆம் வருடம் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பதும், 2013இல் பெங்களூரு மற்றும் உதய்பூரில் நடந்த தேசிய அளவிலான பளூ தூக்குதல் போட்டியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.