அமெரிக்காவில் நடந்த செஸ் போட்டியில் இந்திய செஸ் வீரர் குகேஷின் ராஜா காயை சக போட்டியாளர் எடுத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் Checkmate செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான குகேஷ் கலந்துக் கொண்டுள்ளார். ஒரு சுற்றில் குகேஷ், அமெரிக்க க்ராண்ட் மாஸ்டர் ஹிகாரு நாகமுராவை எதிர்கொண்டார்.
அந்த போட்டியில் குகேஷ் 5-0 என்ற விகிதத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அப்போது குகேஷின் ராஜா காயை எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் தூக்கி எறிந்தார் நாகமுரா. இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் இது சக விளையாட்டு வீரரை கேவலப்படுத்தும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் செஸ் போட்டி ஏற்பாட்டாளர்களோ இது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர். போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டவும், ரசிகர்களிடையே போட்டியின் தீவிரத்தை அதிகரிக்கவும் இப்படி செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K
That moment when Hikaru Nakamura turned around a lost position and checkmated World Champion Gukesh - picking up and throwing Gukesh's king to the crowd, celebrating the 5-0 win of Team USA over Team India!
— டேனியப்பா (@minimeens) October 5, 2025
-FrmFB#chess #chessbaseindia #hikarunakamura #gukesh #indiavsusa pic.twitter.com/wgdKFj8EbC