வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2016 (10:00 IST)

அர்ஜெண்டினா தோல்வி - மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி [வீடியோ]

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் மெஸ்ஸி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 

 
45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் சாம்பியனுக்கான இறுதி போட்டி இன்று (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நியுயார்க் நகரில் நடைபெற்றது.
 
இந்த ஆட்டம் தொடங்கிய முதல் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், தனக்குரிய வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் சிலி அணி கோப்பையை கைப்பற்றியது.
 
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் லயோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதார். அவரை அர்ஜென்டினாவின் சக வீரர்களும், சிலி அணி வீரர்களும் கூட தேற்றினர். 
 
கடந்த கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிச்சுற்றிலும் இந்த இரண்டு அணிகள் மோதின. அந்த போட்டியிலும் பெனால்டி சூட் அவுட் முறையில் சிலி அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இங்கே: