120 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்… கடைசி வரை ஆர்சிபிதான் – கோலி நெகிழ்ச்சி!

mahendran| Last Modified செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:50 IST)

ஆர் சி பி அணிக்கு தலைமை தாங்கி தனது கடைசி போட்டியை விளையாடி முடித்துள்ளார் கோலி.

இந்த சீசனோடு ஆர்சிபி அணி கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக கோலி அறிவித்திருந்தார். அதனால் இந்த முறை கோப்பையோடு அவரை வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நேற்று கொல்கத்தா அணியுடனான ப்ளே ஆப் போட்டியில் தோற்று ஆர்சிபி வெளியேறியது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக தனது கடைசி போட்டி விளையாடிய பின்னர் கோலி பேசியபோது ‘ இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் விளையாடும் ஒரு சூழலை நான் உருவாக்கியுள்ளேன். இந்திய அணியிலும் நான் அதை செய்தேன். ஒவ்வொரு வருடமும் ஆர்சிபி அணியை தலைமையேற்று என்னுடைய 120 சத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் அதை ஒரு வீரனாக செய்வேன். வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன். ஐபிஎல்
விளையாடும் வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :