மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே எல் ராகுல்… அறுவை சிகிச்சையால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறார்!

Last Updated: திங்கள், 3 மே 2021 (09:14 IST)

பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் நேற்றைய போட்டியில் விளையாடாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் கே எல் ராகுல். ஆனால் திடீரென நேற்றைய போட்டியில் அவர் விளையாடாமல் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு குடல் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யபப்ட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அவர் பயோ பபுளில் இருந்து வெளியேறி ஐபிஎல் தொடர் முழுவதற்கும் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் மிகவும் பின் தங்கி இருக்கும் பஞ்சாப் அணிக்கு ராகுலின் வெளியேற்றம் மேலும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இதில் மேலும் படிக்கவும் :