செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2025 (17:49 IST)

ஜோ ரூட்டின் வரலாற்று சதம்: இந்தியாவிற்கு எதிராக சாதனை மழை!

ஜோ ரூட்டின் வரலாற்று சதம்: இந்தியாவிற்கு எதிராக சாதனை மழை!
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ஜோ ரூட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 37வது சதத்தை பதிவு செய்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
 
இன்றைய சதம் ரூட் இந்தியாவிற்கு எதிராக அடிக்கும் 11வது சதம் மற்றும் சொந்த மண்ணில் அடிக்கும் 8வது சதம் ஆகும். ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, இந்தியாவிற்கு எதிராக தனது சொந்த மண்ணில் எட்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல் இதோ:
 
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 8 சதங்கள்
 
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 7 சதங்கள்
 
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 7 சதங்கள்
 
ஜாகிர் அப்பாஸ் (பாகிஸ்தான்) - 6 சதங்கள்
 
டேவிட் பூன் (ஆஸ்திரேலியா) - 6 சதங்கள்
 
ஜாவேத் மியான்டாட் (பாகிஸ்தான்) - 5 சதங்கள்
 
சிவ்நரைன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்) - 5 சதங்கள்
 
மொத்தத்தில், ஒரு அணிக்கு எதிராக எட்டு சதங்கள் அடித்த டெஸ்ட் வரலாற்றில் டான் பிராட்மேனுக்கு பிறகு இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரூட் சமன் செய்துள்ளார். 
 
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூட் இப்போது ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (தலா 36) ஆகியோரை தாண்டி தனது 37வது டெஸ்ட் சதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சங்கக்கார (38), பாண்டிங் (41), காலிஸ் (45) மற்றும் டெண்டுல்கர் மட்டுமே அவரை விட அதிக சதங்கள் அடித்துள்ளனர்.
 
Edited by Mahendran