வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2015 (14:16 IST)

ஐஎஸ்எல் கால்பந்து: முதல் அரையிறுதி ஆட்டம் கோவாவுடன் டெல்லி மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கோவாவுடன் டெல்லி அணி மோதுகிறது. இந்த போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.


 
 
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், லீக் ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா, சென்னை, டெல்லி, கோவா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்த அரை இறுதி போட்டிகள் இரண்டு சுற்று கொண்டதாகும். அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு போட்டிகள் விளையாட வேண்டும். மொத்தம் 4 ஆட்டங்களை கொண்ட அரையிறுதி இரண்டு கட்டங்களாக நடத்தப்படு கிறது. முதல் கட்ட அரையிறுதியில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் - கோவா அணிகள் மோதுகின்றன.
 
கோவா அணி லீக் சுற்றில் 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி லீக் ஆட்டத்தில் இரு முறை டெல்லி அணியை தோற்கடித்துள்ளது என்பதால் இன்று நடைபெறும் போட்டியில் கோவா அணி, எளிதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
 
இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் கோவா அணி 29 கோல்கள் அடித்துள்ளது. அதேபோல், டெல்லி அணி 18 கோல்கள் அடித்துள்ளது.