சச்சின், சேவாக், யுவ்ராஜ் இல்லை – இந்தியன் லெஜண்ட்ஸை காப்பற்றிய முக்கிய வீரர் !

Last Modified புதன், 11 மார்ச் 2020 (08:11 IST)

இந்தியன் லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினருக்கு இடையிலான போட்டியில் இந்திய அணியைப் போராடி வெற்றி பெறவைத்துள்ளார் இர்பான் பதான்.

சாலைவிழிப்புணர்வுக்கான உலக தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய
அணி எளிதாக வெற்றி பெற்றது. அதையடுத்து நேற்று ஸ்ரீலங்கன் அணியுடனானப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய முனாப் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் சச்சின், சேவாக், மற்றும் யுவ்ராஜ் ஆகிய வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று ஆடிய கைப் மட்டும் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இந்நிலையில் தோல்வி உறுதி என்றான நிலையில் நிலைத்து நின்று ஆடிய இர்பான் பதான் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு 57 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.இதில் மேலும் படிக்கவும் :