1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2026 (08:53 IST)

அம்பயர் தவறான முடிவால் தோற்றோம்.. கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த கொல்கத்தா அணி குற்றச்சாட்டு..!

அம்பயர் தவறான முடிவால் தோற்றோம்.. கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த கொல்கத்தா அணி குற்றச்சாட்டு..!
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துரதிர்ஷ்டம் தொடர்கிறது. நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி பந்தில் கொல்கத்தா தோல்வியை தழுவியது. 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு, இளம் வீரர் முகுல் சவுத்ரி கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு ரன் எடுத்து த்ரில் வெற்றி தேடித்தந்தார்.
 
இருப்பினும், இந்த ஆட்டத்தில் கே.கே.ஆர் அணியின் நட்சத்திர வீரர் ஃபின் ஆலன் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை கோட்டிற்கு அருகில் திக்வேஷ் ரதி பிடித்த அந்த கேட்ச், பவுண்டரி கயிற்றை தொட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிந்தது. ஆனால், நடுவர்கள் போதுமான கோணங்களில் அதை ஆராயாமல் அவுட் கொடுத்தது பிழையானது என கொல்கத்தா வீரர் ரோவ்மன் பவல் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடுவர்கள் இதை இன்னும் சரியாக ஆய்வு செய்திருக்க வேண்டும். இது ஒரு பெரிய தவறு. ஃபின் ஆலன் அவுட்டிற்கு பதில் சிக்ஸர் கிடைத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்" என்றார். 
 
இந்த தோல்வியின் மூலம் நடப்பு தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்று, கே.கே.ஆர் அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸை கோட்டையாக மாற்ற நினைத்த கொல்கத்தா ரசிகர்களுக்கு இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை தந்துளது.
 
Edited by Siva