செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2025 (14:59 IST)

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இன்று காலை டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த நிலையில், ஆரம்பத்திலிருந்தே இந்தியப் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வந்தனர். குறிப்பாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா2 விக்கெட்டுக்களையும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பக்கபலமாக இருந்தனர்.
 
இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் மார்க்கம் 31 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய இருக்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த ஆடுகளத்தில் எப்படி ரன்களை குவிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran