உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்தியா முதலிடம் பிடித்து புதிய சாதனை!

cricket
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:10 IST)
புதிதாக வெளியாகியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவை விட 203 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இதனால் இந்தியாவிற்கு 40 புள்ளிகள் கிடைத்துள்ளது. மொத்தமாக 160 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்த டெஸ்ட் ஆட்டங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த வருட உலக கோப்பையில்தான் இந்தியா உலக கோப்பை அட்டவணையில் முதன்முதலாக முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :