புதன், 12 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 அக்டோபர் 2025 (13:24 IST)

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது.
 
இந்த போட்டியில், தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்று 175 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
இதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
ஏற்கனவே சாய் சுதர்சன் 87 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
இதனை அடுத்து, இன்னும் சில நிமிடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியை போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran