1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (09:23 IST)

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா: 78/2

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது
 
முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்து அசத்தினார் மேலும் டெய்லர் 44 ரன்களும் கிராந்தோம் 43 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 183 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான பிபி ஷா  வழக்கம்போல் சொதப்பி 14 ரன்களில் அவுட்டானார். அதனை அடுத்து புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மயங்க் அகர்வால் மட்டும் 52 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மேலும் விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இன்னிங்சில் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது