ஜெர்மனி அணியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும், அது நடக்கும் என்று நம்புகிறேன் - நெய்மர்

Ilavarasan| Last Updated: வெள்ளி, 11 ஜூலை 2014 (17:39 IST)
உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.
இந்த நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரேசில் தோல்வி பற்றி கூறியபோது கண்கலங்கினார். உடனே தலையை குனிந்தப்படி கண்ணீரை துடைத்து கொண்டார்.
 
அதன்பின் உணர்ச்சியை கட்டுபடுத்தி கொண்டு பேசினார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:–
 
என்னை காயப்படுத்திய ஜூனிகா (கொலம்பியா வீரர்) அடுத்த நாள் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அவரை வெறுக்கவில்லை. அவர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக நினைக்கவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :