வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (17:33 IST)

நூற்றாண்டின் மாபெரும் குத்துச் சண்டையில் மேவெதர் வெற்றி

இந்த நூற்றாண்டின் மாபெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்பட்ட போட்டியில் அமெரிக்க வீரர் ஃப்ளொய்ட் மேவெதர் வெற்றிபெற்றுள்ளார். 
 


இதுவரை தோல்வியை கண்டிராதவரான மேவெதர் பிலிப்பைன்ஸ் வீரர் மணி பக்கியாவை தோற்கடித்ததாக நடுவர்கள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.
 
லாஸ் வேகஸ் நகரில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மத்தியில் இருபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான்களும் மோதினர்.
 
பாக்ஸிங் விளையாட்டு உலகின் வில்லன் என்று வர்ணிக்கப்படும் மேவெதருக்கு ரசிகர்கள் அடிக்கடி கிண்டல் செய்து ஆரவாரம் எழுப்பினர்.
 
பக்கியாவுக்கு அவரது பயிற்சியின்போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்த விடயம், இந்த மோதலின் பின்னரே வெளிப்படுத்தப்பட்டது.
 
உலகெங்கிலும் சுமார் 30 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி இந்தப் போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
 
குறுகிய நேரத்துக்குள் விற்றுத் தீர்த்திருந்த டிக்கெட்டுக்கள் இணையத்தில் மறுவிற்பனையில் ஒவ்வொன்றும் சுமார் பல்லாயிரம் டாலர்கள் வரை விற்கப்பட்டிருந்தன.
 
குத்துச்சண்டைப் போட்டி வரலாற்றில் இந்தப் போட்டி தான் மிகவும் விலையுயர்ந்த போட்டி என்று வர்ணிக்கப்படுகின்றது.