வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 5 ஜூலை 2014 (11:07 IST)

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சை வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி பிரான்சை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முதலாவது காலிறுதி போட்டியில் ஜெர்மனி-பிரான்ஸ் அணிகள் மோதின.

இரு அணியினரும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஹூம்மல்ஸ் கோல் அடித்தார்.

இந்நிலையில், கடுமையாகப் போராடிய பிரான்ஸ் வீரர்கள் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல்கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.