வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 18 ஜூன் 2014 (15:05 IST)

உலகக்கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.
 
2014 உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது.
 
இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த 'பெனால்ட்டி' கோலை சமன் செய்வதற்காக பெல்ஜியம் வீரர்கள் கடுமையாக போராடினர். 
 
இந்நிலையில் மரோவேன் பெல்லோவ்னி 70 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி அல்ஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.