இந்தியா கதவுகளை மூடுவதற்குள் தோனி மீள வேண்டும்: டீன் ஜோன்ஸ் விருப்பம்!

Sugapriya Prakash| Last Modified சனி, 25 ஜூலை 2020 (09:21 IST)
தோனிக்கு இது நல்ல இடைவேளை, அவர் மீண்டும் வர வேண்டும் என டீன் ஜோன்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 
 
கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி அதன்பின் ஏப்ரல் -மே என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் போட்டிகள் ஒரு கட்டத்தில் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை ஐபிஎல் நடக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை மூன்று மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
அதற்காக ஒரு மாதம் முன்னரே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் தோனியை காணவே பல ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர். 
கடைசியாக உலக கோப்பையில் ஆடிய தோனி அதோடு ஐபிஎல் போட்டிகளில் தான் ஆட உள்ளார். இந்த ஐபிஎல் தொடர் தோனியின் எதிர்கால கிரிக்கெட் பயணத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இது குறித்து கூறியதாவது, ஐபிஎல் போட்டிகளில் தோனி ஜொலித்தால் இந்திய அணி அவரை முன்னிலைப்பட்டுத்தும். இல்லையென்றால் கதவுகளை அடைத்துவிடும். தோனிக்கு இது நல்ல இடைவேளை. அவர் மீண்டும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :