பிரபல விளையாட்டு வீரர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் !

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி
Sinoj| Last Modified புதன், 24 பிப்ரவரி 2021 (23:18 IST)

உலகில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் இன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க
நாட்டைச் சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ்.
இவர் இவ்விளையாட்டில் மிக அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார்.

இந்நிலையில் இவர் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்த்ரோன் என்ற பகுதியில் தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது எதிர்பாராத விதமான அவரது கார் சாலையில் உருண்டு, மலையடிவாரத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தனர். அப்போது விரைந்துவந்த ஆம்புலன்ஸ் டைகர் வுட்ஸை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :