மாற்றப்படுகிறதா கிரிக்கெட் ரூல்ஸ்? – கங்குலி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:21 IST)
கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்வது உள்ளிட முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மாற்றும் விதத்தில் லோதா கமிட்டி பரிந்துரைகள் உள்ளன. அவற்றை பரிசீலனை செய்வது, மாற்றங்கள் செய்வது குறித்து இன்று கூட்டத்தில் ஆலோசிக்க இருக்கிறார்கள்.

லோதா கமிட்டி பரிந்துரையின்படி ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது பி.சி.சி.ஐயிலோ அதிகபட்சம் 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும். மீண்டும் பதவியேற்க 3 ஆண்டுகள் இடைவெளி அளிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் பல்வேறு வகையில் கிரிக்கெட் சங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எண்ணுகின்றனர்.

மாநில கிரிக்கெட் சங்கத்தில் பதவி வகித்திருந்தாலும், பிசிசிஐ பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து 6 ஆண்டுகள் வரை பதவி வகிக்க அனுகூலம் செய்யும்படி சட்டதிருத்தம் செய்ய இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டி தொடர் தேர்வு கமிட்டி, பெண்கள் கிரிக்கெட் தேர்வு கமிட்டி மற்றும் மண்டல கமிட்டி ஆகியவற்றில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :